Thursday, April 9, 2015

கலைச்சொல் தெளிவோம்! 134. நினைவிழப்பு வெருளி-Amnesiphobia


Amnesiphobia
 நினைவிழப்பு வெருளி-Amnesiphobia
  நினை (5), நினைஇ (7), நினைஇய(1), நினைக்க (1), நினைக்கல் (1), நினைக்குங்காலை (2), நினைக்கும் (1), நினைத்தல் (2), நினைத்தலின் (4), நினைத்திலை (1) நினைத்து (3), நினைத்தொறும் (3), நினைதல் (2)ஈ நினைதி (1), நினை திர் (1), நினைந்த (6), நினைந்தனம் (1), நினைந்தனிர் (1), நினைந்தனென்(1), நினைந்து(43), நினைப்ப(1), நினைப்பது (2), நினைப்பாள்(1), நினைப்பான்(1), நினைப்பின்(9), நினைப்பு(2), நினைபு(1), நினையின்(1), நினைய(1), நினையா(5), நினையாது(4), நினையாய் (2), நினையின்(3)நினையினர்(1), நினையினை(2), நினையுங்கால் (1), நினையுங்காலை, (1)நினையுநர், (1)நினையுபு(2), நினையும், (9)நினையுமோர், (1), நினையூர்(1), நினைவ(1), நினைவல்(1), நினைவனள்(2), நினைவார்(2), நினைவினை (1), நினைவு(5) என நினைவு தொடர்பான சொற்களைச் சங்க இலக்கியங்களில் காணலாம்.
  இழக்குவென்(1), இழந்த(40), இழந்தது (2), இழந்தன்று(1), இழந்தன (4), இழந்தனம்(1), இழந்தனர்(2), இழந்தனள்(2), இழந்தனர்(2), இழந்தனள்(1), இழந்தனை(1), இழந்தாள்(1), இழந்திருந்த(1), இழந்திலேன்(1), இழந்து(10), இழந்தோர் (1), இழந்தோள்(1), இழப்ப(4), இழப்பது(4), இழப்பாள்(1), இழப்பு(1), இழப்போர்(1), இழவாக்கால்(1), என இழப்பு, இழப்பின்மை பற்றிய சொற்களையும் சங்க இலக்கியங்களில் காணலாம். நினைவு இழப்பது நினைவிழப்பு ஆகிறது. நினைவிழப்பு வந்து விடுமோ என்றும், சிறிய நினைவிழப்பையும் பெரிதாக எண்ணியும், இயல்பிற்கு மீறி ஏற்படும் பேரச்சம்
நினைவிழப்பு வெருளி-Amnesiphobia
- இலக்குவனார் திருவள்ளுவன்


- அகரமுதல73: பங்குனி22, 2046/  ஏப்பிரல்05,2015

No comments:

Post a Comment

Followers

Blog Archive