Monday, March 9, 2015

கலைச்சொல் தெளிவோம்! 92 – 94. உயர்வு தொடர்பான வெருளிகள்

kalaicho,_thelivoam01 
உயர்பு வெருளி-Acrophobia
உயர்நிலை வெருளி-Altophobia
உயர வெருளி-Hypsiphobia

ஆழம் பற்றிய அச்சம் வருவதுபோல், உயரம் பற்றிய அச்சமும் இயல்புதானே! சங்கப்பாடல்களில்
உயர்(210), உயர்க்குவை(1), உயர்க(3), உயர்த்த(8), உயர்த்து(4), உயர்திணை(1), உயர்ந்த(15), உயர்ந்ததேஎம்(1), உயர்ந்தவர்(1), உயர்ந்தவள்(1), உயர்ந்தன்று(4), உயர்ந்திசினோர்(1), உயர்ந்து(17), உயர்ந்துழி(1), உயர்ந்தோர்(8), உயர்ந்தோருலகு(1), உயர்ந்தோர்நாடு(1), உயர்ந்தோருலகம்(1), உயர்ந்தோன்(1), உயரிநிலைஉலகம்(7), உயர்நிலைஉலகு(5), உயர்பு(4), உயர்வு(2), உயர(2), உயரி(2), உயரிய(6), உயரும்(1), உயருலகு(1) என மலையுச்சி போன்ற உயரமான இடங்களைக் குறிக்கும் வகையிலும் உயரத்தின் அடிப்படையில் பண்பில், செல்வத்தில், பிறவற்றில் உயர்ந்த நிலையையும் குறிக்கும் வகையில் சங்கப் புலவர்கள் கையாண்டுள்ளனர்.
பொதுவாக உயரமானவற்றைப் பார்த்தால் ஏற்படும் அச்சத்தை உயர வெருளி என்றும் உயர்பு அச்சம் என்றும கூறுகின்றனர். உயரமான நிலப்பகுதிகளைப் பார்த்தால் அல்லது உயரமான இடத்திற்குச் சென்றால் ஏற்படும் இயல்பு மீறிய கலக்கம்/பேரச்சம் உயர்நிலை வெருளி எனப்படுகிறது.
உயர்பு வெருளி-Acrophobia
உயர்நிலை வெருளி-Altophobia
உயர வெருளி-Hypsiphobia
- இலக்குவனார் திருவள்ளுவன்


No comments:

Post a Comment

Followers

Blog Archive