phobia-picturekalaicho,_thelivoam01 
இருள் (164), இருளி (6), இருளிய (9), இருளின் (1)
என இருள் தொடர்பான சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் பெற்றுள்ளன.
இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து (திருமுருகு ஆற்றுப்படை : 10)
அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி, (பெரும்பாண் ஆற்றுப்படை : 1)
குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின் (மதுரைக் காஞ்சி : 195)
உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள் (நற்றிணை : 68.8)
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக் (குறுந்தொகை : 81.5)
இருட்டைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் :
இருள் வெருளி-Achluophobia/Lygophobia/Nyctophobia/Scotophobia
 - இலக்குவனார் திருவள்ளுவன்