101. கருதுபு வெருளி/கருத்து வெருளி-Allodoxaphobia/ Ideophobia

 கருதி (2), கருதிய (1), கருதியது (1), கருதியாய் (1), கருதின் (1), கருதுபு(1), கருதும் (2), கருதுவிர்(1) என்னும் சொற்களைச் சங்கப் பாடல்களில் பயன்படுத்தி உள்ளனர். எண்ணிக் கருதுவதால் வருவதுதானே கருத்து.
சிலருக்குக் கருத்தைக் கேட்டாலேயே தேவையற்ற பேரச்சம் ஏற்படும்.
கருத்துகள், அறிவாராய்ச்சித் திறன் ஆகியவற்றால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம்
கருதுபு வெருளி/கருத்து வெருளி-Allodoxaphobia/ Ideophobia

102. கழுது வெருளி-Demonophobia/Daemonophobia


கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப (மதுரைக்காஞ்சி 633)
கழுது புகவயர (ஐங்குறுநூறு : 314)
எனப் பேயின் வகையாகக் கழுது என்று சொல்லப்பட்டுள்ளது.
கழுது வெருளி-Demonophobia/Daemonophobia

103. காற்று வெருளி-Aerophobia

குட காற்று எறிந்த குப்பை, வட பால் (பெரும்பாண் ஆற்றுப்படை : 240)
காற்று என்னக் கடிது கொட்பவும்; ( மதுரைக் காஞ்சி 52)
காலமும், விசும்பும், காற்றொடு கனலும் (பரிபாடல் : ;13.25)
பெரும் மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனை பெயல் (கலித்தொகை : 45.4)
கடுங் காற்று எடுக்கும் நெடும் பெருங் குன்றத்து (அகநானூறு : 258.6)
பெருங் கலக்குற்றன்றால் தானே காற்றோடு (புறநானூறு : 41.16)
காற்றைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம்
காற்று வெருளி-Aerophobia

104. பறத்தல் வெருளி -flying phobia/flight phobia 

சிலர்காற்றுமண்டிலத்தில் – வானில் – பறப்பதற்கு ஏற்படும் அச்சத்தையும் இவ்வாறு சொல்கிறார்கள். பறப்பதற்கான அச்சத்தைப் பறத்தல் வெருளி(flying phobia/flight phobia) எனக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.