Wednesday, January 21, 2015

கருவிகள் 1600 : 441 – 480 : இலக்குவனார் திருவள்ளுவன்

கருவிகள் 1600 : 441 – 480 : இலக்குவனார் திருவள்ளுவன்


441. ஒற்றை அச்சுச் சுழல் நோக்கி –  single-axis gyroscope
442. ஒற்றை நிறமானி – monochrometer
443. ஒற்றைக் குறிகைநோக்கி – monoscope
444. ஒற்றைக்கட்ட மானி – single-phase meter
445. ஒற்றைப் பொன்னிழை மின்னோக்கி – Wilson electroscope
446. ஓசைமானி – toro meter
447. ஓட்ட வகைத் தொலை மானி – current-type telemeter
448. ஓட்ட வகைப் பாய்மமானி – current-type flowmeter :    மூடியும் திறந்தும் உள்ள தடங்களில் நீர்மத்தின் திசை வேகத்தை அளவிட உதவுவது. இதழி உலவைமானி(anemometer) போன்றது.
449. ஓட்டநோக்கி / அணுத்துகள் ஓட்டநோக்கி – hodoscope : அணுத்துகள் ஓட்டத் தடம் நோக்க உதவும் அணுத்துகள் தட நோக்கிக் கருவி.
450. ஓட்டமானி/வண்டி ஓட்டமானி hodometer / odometer/ viameter/ viatometer :வண்டிச்சக்கரம் ஓடிய தொலைவை அளவிடும் கருவி என்பதால் சகடத் தொலைவுமானி(-செ.). என்பதை விட ஓட்டமானி என்பது பொருத்தமாக இருக்கும்.
451. ஓத அளவி – tide gauge
452.  ஓரக ஒளிமானி – isophotometer : நேரடிப் பதிவு ஒளிமானிக்கருவி; தானாகவே அலகூடி, ஒளியியஅடர்த்தியை அளவிடும். ஐசோ(iso-) என்னும் கிரேக்க முன்னொட்டிற்கு, அதே, சம, ஒரே வகையான, ஒரேபடித்தான எனப் பொருள்கள். எனினும் பெரும்பாலோர் தமிழில் ‘ஐசோ’ எனவே ஒலி பெயர்ப்பில்குறிப்பிடுகின்றனர். அறிஞர் மூர்த்தி ஓரக என்னும் சொல்லைக் கையாளுகிறார். இதன் அடிப்படையில் இதனை ஓரக ஒளிமானி எனலாம்
453. ஓரக வெப்பநிலை வெம்மிமானி – isothermal calorimeter
454. ஓரகத்தனிமக் காலமானி – isotopic chronometer புவியியல், தொல்லியல் அல்லது பிற மாதிரிகளின் காலத்தை ஓரகத்தனிமம்மூலம் வரையறுக்கும் கருவி.  ஓரகத்தனிம நுண்கடிகாரம் எனச் சொல்வதை விட (-இ.) ஓரகத்தனிமக் காலமானி என்றால் பொருத்தமாக அமையும்.
455. ஓரிழை மின்மானி – unifilar electrometer
456. ஔவு-படுகைத் தொலைநோக்கி – grazing-incidence telescope : அண்டக் கதிர்வாயில் ஆய்வுத் தொலைநோக்கி, மீச்சிறு கதிர்த் தொடுகோணப் படுகதிர்த்தொலைநோக்கி என இருபெயர்களில் குறிப்பிடுகின்றனர். ஔவுதல் பற்றுதலையும் கவ்வுதலையும் குறிக்கும். மேய்தல் என்று சொல்லுவதைவிட ஔவுதல் என்பது சரியாக இருக்கும். எனவே, சுருக்கமாக ஔவு-படுகைத் தொலைநோக்கி எனலாம்.
457. கட்டிலாச் சுழல் நோக்கி – free gyroscope
458. கட்புல ஒளிமானி – visual photometer
459. கட்புல மானி – visibility meter
460. கட்புல வண்ணமானி – visual colorimeter
461. கடத்து திறன் அளவி – conductivity gauge
462. கடத்துமைமானி – conductometer
463. கடல்நீர் வெப்பமானி – seawater thermometer
464. கடல்போக்கு மின்னோட்டமானி – von arx current meter        ஆழ்கடல் போக்கையும் விரைவையும் கண்டறிய மின்காந்தத் தூண்டலைப் பயன்படுத்தி   அளவிடும் மின்னோட்டக் கருவி.
465. கடலாழ அளவி – sea gauge : கடலாழத்தை அளவிடும் கருவி.
466. கடற்பரப்பு வெப்பமானி – surface thermometer
467. கடிகாரமானி – clock meter
468. கடிகை-திசைமானி – pantochronometer : மின்னணு கடிகாரம், மாலுமி காலமானி கடிகாரம், காலமாணி, கடிகை, திட்பக்காலக் கணிப்பளவுக் கருவி என வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுகின்றனர். காலமாணி என்பது (அச்சுப்)பிழையாகும். திசைகாட்டி, சூரியக்கடிகாரம், பன்னாட்டு நேரங்காட்டி ஆகியன இணைந்த ஒன்றாகும். கடிகை-திசைமானி எனலாம்.
469. கடினநோக்கி – scleroscope : மீள்கடினத்தன்மையை அளவிடப் பயன்படும் கருவி. பந்துமோது கடினத்தன்மை அளவி (-இ.), வன்மை காட்டி (-ஐ.) எனக் கூறப்படுகின்றன. வன்மைமானி என்றால் டியுரோமீட்டர்/ durometer எனக் கருதப்படும். எனவே, கடினநோக்கி எனலாம்.
470. கடினமானி – sclerometer
471. கண்ணாடி அளவி – glass gauge
472. கண்ணாடிக் கதிரியக்கமானி – glass dosimeter
473. கண்ணாடி நீர்ம வெப்பமானி – liquid-in-glass thermometer
474. கண்ணாடி வெப்பமானி – glass thermometer
475. கண்ணாடிக்குழாய் வளியழுத்தமானி – glass-tube manometer
476. கண்ணாடியிழை மூச்சுக்குழல் அகநோக்கி – (க. மூ. அ.) fibre optic bronchoscope (f.o.b.)
477. கண்ணி மின்கடவுமானி – loop galvanometer
478. கண்ணொளி மானி – dioptometer : கண்வில்லையின் ஒளி குவிவு அல்லது ஒளிவிலகல் பற்றி வரையறுக்க உதவுவது. கண்வில்லை ஒளிவிலகல் அளவி (-இ.) என்பது நீளமாக இருப்பதுடன் ஒளிவிலகலை அளவிடுவது பற்றி மட்டும் குறிக்கிறது. எனவே, கண்ஒளியின் குவிவிற்கும் கண்ஒளியின் விலகலுக்கும் பொதுவாகக் கண்ணொளிமானி எனலாம்.
479. கண்ணோக்கி    – ophthalmoscope   : கண் உள்நோக்கி, கண் சோதனைக்கருவி, விழி ஆய்வுக்கருவி, கண்நோக்கி, என வெவ்வறோகக் குறிப்பிடுகின்றனர். கண்ணகநோக்கி > கண்ணோக்கி ஏற்றது.
480.கண்திறன் மானி – ophthalmometer
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png

- இலக்குவனார் திருவள்ளுவன்



No comments:

Post a Comment

Followers

Blog Archive