Tuesday, February 1, 2011

andre' sonnaargal: அன்றே சொன்னார்கள் - 2 பெண்மையைப் போற்றுவோம்!

>>அன்றே சொன்னார்கள்

natpu

அன்றே சொன்னார்கள் - 2 பெண்மையைப் போற்றுவோம்!

                                                                                                                

பெண்களைப் பழங்காலத்தில் இருந்தே அடிமையாக எண்ணியுள்ளதாகப் பலர் தவறாக எழுதியும் பேசியும் வருகின்றனர். ஆரிய எண்ணங்களால் சிலர் இடைக்காலங்களில் அத்தகைய போக்கிற்கு ஆளானாலும் பழந்தமிழர் நெறி என்பது பெண்ணையும் ஆணையும் இணையாக எண்ணிப் போற்றியதே. காலச்சூழலால் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்னும் வினாத் தோன்றிய அவலம் ஏற்பட்டுள்ளது. பெண்களைப் பற்றி உலக மொழியியல் அறிஞர் தொல்காப்பியர்,

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்                
அறிவும் அருமையும் பெண்பாலான   

என்கிறார். பெண்களுக்கான பண்புகளில் அறிவையும் தொல்காப்பியர் கூறுகிறார் எனில் பெண்களுக்கும் கல்வி என்பது கட்டாயமான ஒன்றுதானே. இதனைப் புரிந்து கொள்ளாமல் பரிமேலழகர் ஆரிய வழியில் பெண்களுக்கு அறியும் ஆற்றல் கிடையாது என எழுதிச் சென்று விட்டார் (திருக்குறள் 69 உரை).
 எனவே, பழந்தமிழர் நெறியில் பெண்ணும் ஆணும் இணை என்பதை உணர்த்தினால்தான் பெண் குழந்தைகளைக் கருவிலும் பிறந்தவுடனும் அழிக்கும் கொடுமைகள் நிற்கும். இனியேனும் பெண்மையைப் போற்றுவோம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments

(Jan 14, 2011) Ilakkuvanar Thiruvalluvan said:
அன்புடையீர்
நன்றி. பக்க அளவு கருதி முதலில் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன். இருப்பினும் தங்கள் கருத்துரை விளக்கம் அந்தக் குறையைச் சரி செய்து விட்டது. நனி நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(Jan 11, 2011) பெரியண்ணன் சந்திரசேகரன் said:
மிகச் சிறப்பான முயற்சி. இதை இப்படித் தொல்காப்பிய மேற்கோளோடு உணர்த்துவது நல்லது.
பாராட்டுகள். மக்களிடத்தில் பரவியிருக்கும் தவறான எண்ணத்தை நீக்கும்.
அந்தக் கட்டுரையில் அந்தப் பண்புகளுக்கான சொற்பொருளையும் விளக்கியிருந்தால் சிறக்கும்.

இளம்பூரணர் உரை:
========
செறிவு என்பது - அடக்கம்
நிறைவு என்பது - அமைதி
செம்மை என்பது - மனங்கோடாமை
செப்பு என்பது - சொல்லுதல்.


அறிவு என்பது - நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் அறிதல்.

அருமை என்பது - உள்ளக் கருத்தறிதலருமை. இவை எல்லாம் பெண்பக்கத்தின என்றவாறு.

இதனாற் சொல்லியது மேற்சொல்லிய அறத்தொடுநிலைவகை. இனிக் கூறுகின்ற வரைவுகடாதற்குப் பகுதியும் உண்மை வகையானும் புனைந்துரைவகையானும் கூறுங்கால் இவை பேதையராகிய பெண்டிர்க்கு இயையுமோ என ஐயுற்றார்க்குக் கூறப்பட்டது.

rss

No comments:

Post a Comment

Followers

Blog Archive